ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை ஆதரிக்க முடியும்- பசில் கருத்து!

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தபடுமென ஜனாதிபதி nரிவித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பாக தாம் இன்னும் இறுதியான முடிவு ஒன்றை எடுக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் தொடர்பில் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் காணப்படுகின்றன.

உதாரணமாக சரத் வீரசேகர போன்றவர்கள் அதனை எதிர்க்கின்றனர்.

இது தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டு வருகின்றது. இன்னும் கட்சி என்ற வகையில் உறுதியானதும் மற்றும் இறுதியான முடிவை நாம் எடுக்கவில்லை.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு கோட்பாட்டை ஆதரிக்க முடியும்.

மஹிந்த சிந்தனையிலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. 13 பிளஸ் என்ற கருத்தை மஹிந்த ராஜபக்ச முன்வைத்தார்.

அது அனைத்து மாகாணசபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான செனட் சபை முறையாகும் என்றும் பஸில் குறிப்பிட்டார்.

Leave a Reply