இரண்டு பிரபல கலைஞர்களை இழந்தது இலங்கை சினிமா துறை!

இலங்கை திரைத்துறையின் பிரபல கலைஞர்கள் இன்று மாரணமடைந்தள்ளனர்.

பிரபல பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா மற்றும் பழம்பெரும் நடிகர் காமினி அம்பலாங்கொட ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்த பிரபல பாடகர் டெஸ்மண்ட் டி சில்வா, திடீர் மாரடைப்பு காரணமாகத் தனது 78 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் ‘பைலா’ இசை பாடல்கள் மூலம் டெஸ்மண்ட், மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.

உலகின் பல முக்கிய நகரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இலங்கையின் பழம்பெரும் நடிகரான காமினி அம்பலாங்கொட தனது 66 ஆவது வயதில் காலமானார்.

‘சிங்கள கோஸ்தரே’ என்ற மேடை நாடகத்தின் நடிப்பு துறைக்குப் பிரவேசித்த இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஆவார்.

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக சுகவீனமுற்று இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *