
மின்சாரம், எரிவாயு மற்றும் உணவு இறக்குமதி இல்லாமல் எவ்வாறு வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேம தாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நாளைமுதல் மூன்று மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தாலும், சுற்றுலாத் துறை முடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு நெருக்கடியான நிலையிலிருந்து மீண்டுவர விரும்பினால் டொலர்களை கொண்டு வருபவர்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
How can businesses survive without power, gas and food imports? Tourists are arriving but the tourism sector is crippled. If we want to build our reserves support those bringing in the dollars. #EconomyFalling https://t.co/aVCUczgtzp
— Sajith Premadasa (@sajithpremadasa) January 9, 2022