
“ஒரேநாடு ஒரே சட்டத்தை” ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருக்கின்றதெனத் தாம் நம்புவதாகவும், எந்தத் தடைகள் ஏற்படினும், அவற்றைக் கடந்து இப்பணியில் வெற்றிபெற ஜனாதிபதி அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பழங்குடியினத் தலைவர் வன்னில அத்தோ குறிப்பிட்டார்.
தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகக் காணிப் பிரச்சினை காணப்படுவதாக, பல தோட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ” ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியில் கருத்துத் தெரிவித்தனர்.
பழங்குடியினத் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
‘ஒரேநாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதிச் செயலணி, தற்போது ஊவா மாகாண மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகிறது.
இம்மாதம் 06ஆம் திகதியன்று மஹியங்கனை பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த செயலணியினர், அதன் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோவிடம் இருந்து, பழங்குடியின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
“ஒரேநாடு ஒரே சட்டத்தை” ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு பலம்இருக்கின்றதெனத் தாம் நம்புவதாகக் கூறிய வன்னில அத்தோ, எந்தத் தடைகள் ஏற்படினும், அவற்றைக் கடந்து இப்பணியில் வெற்றிபெற ஜனாதிபதி அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். ஜனவரி 08 ஆம் திகதியன்று பதுளை மாவட்டச் செயலகத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதிச் செயலணி முன்னிலையில் கருத்துத் தெரிவித்த ஹஷீனா, தான் இஸ்லாமிய சட்டப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் பதுளை காதியார், எந்தவித அறிவிப்புமின்றி தனதுகணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேசஆளில்லை என்றும் தம்மீது அக்கறை காட்ட எவரும் இல்லாததால், “ஒரேநாடுஒரேசட்டம்”திட்டத்தை நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
நாட்டில்வாழும் ஏனைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகளைப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ்மக்கள் அனுபவிப்பதில்லை.
இதுதொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கவனஞ் செலுத்த வேண்டும்- என்றார்.
அதேபோன்று, தோட்டப் பகுதிகளில் உள்ளமக்கள் எதிர்நோக்கும் பிரதானபிரச்சினையாகக் காணிப் பிரச்சினை காணப்படுவதாக, பல தோட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் செயலணியிடம் தெரிவித்தனர்.