வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்!

<!–

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்! – Athavan News

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கான தலைமைப் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி  கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக றம்புக்கணை பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி இன்று (திங்கட்கிழமை) காலை 10.26 என்ற சுபநேரத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.மானவடு கடந்த   புதன்கிழமை கொஸ்வத்தை பகுதிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு ஜெயக்கொடி இலங்கை பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார் .

இன்றைய இந்நிகழ்வில் சமயத்தலைவர்களின் ஆசியுடன் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார் .


Leave a Reply