பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்! சுகாதார பரிசோதகர் சங்கம்

பாடசாலைக்குச் செல்லும் போது மாணவர்கள் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிப்பது மிகவும் அவசியம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட்டால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை இடையூறுகள் இன்றி தொடர முடியும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் அல்லது கொரோனா நோயாளியுடன் நெருங்கிய தொடர்பை உடையவராக கருதப்பட்டால், தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

ஒரு பிள்ளை கொரோனா அறிகுறிகளை பாடசாலையில் வெளிப்படுத்தினால், எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு உள்ளது.

அனைத்து பிரிவினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறு செயற்படத் தவறினால் பாடசாலைகளுக்குள் நெருக்கடியான மற்றும் வருந்தத்தக்க நிலைமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுமா? மின்சக்தி அமைச்சர் விடுத்துள்ள தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *