
தேசிய டெங்கு வார்த்தை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபையினால் இன்று மற்றும் நாளைய தினம் அதாவது (10/01/2022 தொடக்கம் 11/01/2022 வரையில்) குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
அதற்கமைய குச்சவெளி பிரதேபைக்குட்பட்ட புல்மோட்டை பகுதியில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் நேரடியாக கலத்தில் நின்று செய்யப்பட்டதுடன் புல்மோட்டை உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
அதற்கமைய குறித்த நிகழ்ச்சித் திட்டம் நாளைய தினமும் ஒவ்வொரு பிரதேசங்களில் இடம்பெறவுள்ளதால் பொதுமக்கள் தங்களது குடியிருப்பு வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு முன்னால் உள்ள குப்பைகள், வடிகான்களை துப்புரவு செய்து டெங்கு நுளம்பு பரவும் நிலைமையினை குறைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு தவிசாளர் அன்பாய் கேட்டுக் கொள்கின்றார்.
அத்துடன் தங்களின் பகுதியிலுள்ள வட்டார கௌரவ உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்று டெங்கு வாரத்தை நடைமுறைப்படுத்துமாறும் தவிசாளர் மேலும் கேட்டு கொள்கின்றார்.


