சுசில் பிரேமஜயந்த தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தீர்மானம்!

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் மேற்கொள்ளப்படும் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த, அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறு பதவி நீக்கப்பட்டார்.

எனினும் அவர் தொடர்ந்தும் அந்தக்கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில் இவரை கட்சியில் நீடிப்பதா இல்லையா என்ற முடிவு எதிர்வரும் தினங்களில் கட்சியின் அரசியல் குழுவினரால் அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *