
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் நான்கு திறந்து விடப்பட்டுள்ளன.
வான் கதவுகள் நான்கும் இன்று ஒரு அடிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


