
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கை காரணமாக இலங்கையை மீண்டும் சர்வதேச கடன் தரப்படுத்தலில் கீழ் நோக்கி கொண்டு செல்லக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் இட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த மேலதிக காலத்தை வழங்குமாறு, தன்னை சந்தித்த சீன வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை இதற்கு காரணம்.
இந்த கோரிக்கை, இலங்கை கடனை திரும்ப செலுத்த முடியாத நாடாக மாறியுள்ளது என சர்வதேச நிதி சந்தைக்கு வழங்கிய மிக ஆபத்தான சமிக்ஞையாகும்.
இதனால் சர்வதேச நிதி சந்தையான இலங்கையை மேலும் கீழ் நோக்கி தரப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

