ஆரியகுளம் உரித்து தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

ஆரியகுளம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு வந்த சந்தேகத்திற்கான ஆவணம் தற்போது வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் உரித்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மாநாகர சபையின் ஆணையாளரிடம், எழுத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, பல அரசியல் தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆரியகுளத்தின் பெயரில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இதனால் ஆரியகுளம் அமைக்கும்போது இருந்த பேச்சைவிட, இந்த உரித்து தொடர்பான விவகாரம் அதிக பேசுபொருளானதால் அது தொடர்பான உரித்து ஆவணம் தேடலும் மும்முரமாக இடம்பெற்றது.

இவ்வாறு தேடப்பட்டதன் அடிப்படையில், 1930ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களம் வரைந்த வரைபடத்தை வைத்துக்கொண்டு, 1938 ஆம் ஆண்டு அப்போதைய யாழ். மாவட்ட அரச அதிபர், அப்போதைய உள்ளூர் அதிகார அபிவிருத்தி சபைக்கு அதனைப் பராதீனப்படுத்த வரைபடம் தயாரிக்குமாறு எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அப்போதை ஆளுநர் வழங்கிய அனுமதியின் பெயரில் ரி.13817 இலக்க நில அளவைத் திணைக்களத்தின் மூலம் தற்போதைய மாநகர சபையும் (அப்போதைய நகர அபிவிருத்தி சபையிடம்) அது கையளிக்கப்பட்ட வரைபடமும் வெளிப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *