சிறைச்சாலையில் ரஞ்சனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு (Ranjan Ramanayake) சிறையில் இருந்த வகையில் உயர் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தற்போதுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு நாவலவில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் மேம்பாட்டு பணிக்கான முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவ திறன்கள் தொடர்பான கல்வி நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜூம் தொழில்நுட்பம் மூலம் விரிவுரைகளில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *