காணாமல் போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்….!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த, சிறுமியின் விபரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அதனையறிந்த சிறுமி தனது தாயாரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *