
தமிழர் திருநாள் தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்றையதினம் (14)தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளிலும் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தினர் .
மக்களின் வீடுகள் ,வியாபார இஸ்தாபனங்கள் ,தொழில் நிலையங்கள் ஆலயங்களில் பானைகளில் பாலிட்டு பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசி ஏற்றத்துக்கு மத்தியிலும் மக்கள் தமிழர் திருநாளை கொண்டாடினர்.
விசேடமாக கத்தோலிக்க தேவாலயங்களிலும் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர்.
முல்லைத்தீவு இராஜப்பர் தேவாலயம் ,முல்லைத்தீவு தீர்த்தகரை வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவற்றில் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
முல்லைத்தீவில் வீதி ஓரங்களில் பொது இடங்களிலும் இராணுவத்தினர் பொங்கல் வாழ்த்து பதாதைகளை காட்சி படுத்தியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.




