
கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருப்போர் குறித்த தகவல்களைச் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த நடவடிக்கைகள் இன்று, நாளை மற்று மறுநாள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்களின் வீடுகளில் தங்கியிருப்போர், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள், அரசு அல்லது தனியார் வளாகங்கள், கட்டுமாண இடங்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருப்போர் பற்றிய தகவல்களே சேகரிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.




