
அண்மையில் மானிப்பாய்க்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அப்பகுதியிலுள்ள இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மைய நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்து, பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல மருத்துவமனைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், பல பாடசாலைகளுக்கு கணினி தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்கியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் மானிப்பாய்க்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அப்பகுதி இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




