
அரசாங்கம் மக்களை வாழ வைக்க வேண்டுமே என்றாலும் தற்போதைய அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்லுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று அரசாங்கத்தினால் மக்களுக்கு அத்தியாவசியமான எதனையும் பெற்றுக்கொடுக்கவோ அல்லது வழங்கவோ முடியவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், புலமையாளர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் கூறிக்கொண்ட அரசாங்கம் தற்போது நாட்டை பேரழிவை நோக்கி தள்ளியுள்ளது எனவும் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு பால் மா இல்லாத, நாட்டுக்குத் தேவையான எரிபொருள் இல்லாத, மின்சாரம் துண்டிக்கப்படும் இருண்ட நாட்டையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆம் திகதி நல்லூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.




