இன்று முதல் லங்கா சதொச மூலம் சலுகை விலையில் பொருட்கள்!

2022ஆம் ஆண்டுக்கான லங்கா சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களைப் பொதி செய்து வழங்கும் நடவடிக்கை இன்று முதல் அமுல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தப் பொதியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

20 அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட ஒரு பொதி 3,998 ரூபாவாகவும், அதன்படி, 10 கிலோ சுப்பர் சம்பா, ஒரு கிலோ வெள்ளைச்சீனி, ஒரு கிலோ சிவப்பு பருப்பு, ஒரு கிலோ இடியப்ப மாவு, 500 கிராம் நெத்தலி, 400 கிராம் நூடில்ஸ், 400 கிராம் உப்பு, 2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 மி.லீ.பக்கெற்), 100 கிராம் மிளகாய் தூள், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் ளுவுஊ தேயிலை, 80 கிராம் பொடி லோஷன், 100 கிராம் சதொச சந்தன சவர்க்காரம், 100 மி.லீ. கை கழுவும் திரவம், 90 கிராம் சோயா மீற், சதொச வுகுஆ சலவை சவர்க்காரம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.

இதன் மூலம் நுகர்வோர் 1,750 ரூபா நிவாரணத்தைப் பெற முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத பிரதேசங்களில் உள்ள மக்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது பொதிகளை வீடுகளுக்குப் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

உழவியந்திரச் சில்லுக்குள் சிக்கி யாழில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *