
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை குறித்த விசாரணைகள் தொடர்கின்றன என பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரரட்ண தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எந்த பதவியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எவ்வளவு உயர் பதவியிலிருந்தாலும் சரி அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸார் ஆரம்பத்தில் முன்னெடுத்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தற்போது பொருப்பேற்றுள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளை சட்டத்தின் அடிப்படையில் ஆராய்ந்து வருகின்றோம்.
வாக்குமூலங்களை சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. சிசிடி பிரிவினர் இதுவரை 14 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
நிபுணர்களின் நிபுணத்துவ உதவியுடன் விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கைக்குண்டு வைக்கப்பட்டதற்கான காரணங்களையும், சந்தேகநபர்களையும் விரைவில் கண்டுபிடிப்போம். முக்கிய சூத்திரதாரிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இது சதிமுயற்சியா என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




