மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

இன்று (15) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து 3000 மெற்றிக் தொன் டீசலை பெற்றுக்கொண்டதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் நாட்டில் 24 மணிநேர மின்வெட்டு ஏற்படக் கூடும் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மின் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிக்கக் கூடும் என்று, சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறியதன் விளைவாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நாடு கடும் வரட்சியை எதிர்கொள்வதை இலங்கை மின்சார சபை அறிந்துள்ளதாகத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், வரட்சிக்கு முகம் கொடுக்க இலங்கை மின்சார சபை தயாராக இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply