நோவெக் ஜொகோவிச் மீதான நீதிமன்ற விசாரணை இன்று!

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவெக் ஜொகோவிச் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர் குறித்த நீதிமன்ற விசாரணைகள் இன்று இடம்பெறுகின்றன.

நோவெக் ஜொகோவிச்சின் விசா இரண்டாவது முறையாக இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விசாரணைகளை அடுத்தே உறுதியான தகவல்கள் வெளியாகும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதமையினால் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைவதற்கான அனுமதி அவருக்கு இரத்து செய்யப்பட்டிருந்தபோதும், நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி அவரை நாட்டுக்குள் அனுமதித்தது.

எனினும், அவுஸ்ரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலியான தகவலை உள்ளடக்கியதை நொவெக் ஜொக்கோவிச் ஒப்புக்கொண்ட நிலையில், அவரது விஸாவை மீண்டும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply