இன்றும் மின்வெட்டா? வெளியான புதிய அறிவிப்பு

நாட்டில் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் இன்று ஏற்படாது என மின்சார சபை அறிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நடைமுறை இன்றைய தினம் தடை செய்யப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, நேற்றிரவும் நாட்டின் பல பாகங்களில், ஒரு மணிநேர மின் துண்டிப்பு அமுலாக்கப்பட்டது.

எனினும், மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது

இதேநேரம், இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் வழங்கும் 3,000 மெற்றிக் டன் டீசலை தரையிறக்கும் நடவடிக்கை நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply