நாட்டில் தேங்காயெண்ணெயிலும் மோசடி! அரச அதிகாரிகளுக்கும் பங்கு

நாட்டில் தேங்காயெண்ணெய் மோசடிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காயெண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்துகின்றது.

தனியார் நிறுவனமொன்று கடந்த சில மாதங்களாக வௌிநாடுகளிலிருந்து 12 ஆயிரம் மெட்ரிக் தொன் தேங்காயெண்ணெய்யை கொழும்பு துறைமுகத்தில் தேக்கிவைத்து மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறு அகில இலங்கை பாரம்பரிய தேங்காயெண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் புத்திக டி சில்வா குறிப்பிட்டார்.

இதன் மூலம் 1500 மில்லியன் ரூபா வரி மோசடியொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்,

இந்த தேங்காயெண்ணெய் தொகையினை துறைமுகத்தில் மறைத்து வைத்து அரசாங்கத்திடம் வரி சலுகை பெற்று அதனை நாட்டிற்குள் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக நாட்டில் தேங்காயெண்ணெய் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக காண்பித்தே அரச அதிகாரிகளுடன் இணைந்து இந்த மோசடி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் நாட்டிற்கு சீனி கொண்டு வந்த மோசடி செய்த நிறுவனமே இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply