ஒமிக்ரானை கண்டறிய 182 மாதிரிகள் தொடர்பான இறுதி அறிக்கை இன்று!

ஒமிக்ரான் தொற்றாளர்களை கண்டறிவதற்காக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட 182 மாதிரிகள் தொடர்பான இறுதி அறிக்கை இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்துவரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கது என்பதால், இந்த வாரத்தில் செயலூக்கி தடுப்பூசியை இயன்றளவு பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த வாரத்துக்குள் செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply