தரத்திற்கு ஏற்ப அதிபர், ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் !

அதிபர், ஆசிரியர் ஆலோசகர் சேவை , ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தியமை தமது போராட்டத்தின் வெற்றி என ஆசிரியர் சங்கங்ம் தெரிவித்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு பங்களித்த அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையை நாசப்படுத்த பலர் முயற்சித்து தமது போராட்டத்தை நிறுத்தியதாக அச்சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையின் மூலம், அடிப்படை சம்பள உயர்வை வெற்றிகரமாக பெற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.

அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் சேவையில் உள்ளவர்களின் தரத்திற்கு ஏற்ப அடிப்படை சம்பளங்களும் அதிகரிக்கப்படும் என மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

Leave a Reply