சம்மாந்துறையில் வசதி குறைந்த மக்களுக்கு நீரிணைப்பு, மின்சாரம் பெற உதவி வழங்கிவைப்பு !

சம்மாந்துறையில் வசதி குறைந்த மக்களுக்கு நீரிணைப்பு, மின்சாரம் பெற உதவி வழங்கிவைப்பு !

நூருல் ஹுதா உமர்

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக மக்ஷன்ஸ் பெய்ண்ட்ஸ் லங்கா (மல்ட்டிலக்) நிருவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி சஜாட் சாலிஹீன் அவர்களினால் சம்மாந்துறை பிரதேசத்திலிருந்து வரிய குடும்பங்களில் இருந்து புதிய நீர் இணைப்பு, மின்சார இணைப்பு பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களும், மேலதிக அடிப்படை வசதியற்றவர்களும் உள்வாங்கப்பட்டு சுமார் 50 தெரிவு செய்யப்பட்ட வரிய குடும்பங்களிற்கு தலா 15000 உதவிப்பணம் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையில் அதிக சனத்தொகை கொண்ட, மிகப்பெரிய பரப்பளவை கொண்ட சம்மாந்துறை எனும் எங்கள் ஊரில் இப்படியான தேவைகளை உடைய ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளார்கள். அதில் சிலருக்கு எங்களினால் முடிந்த உதவிகளை மக்ஷன்ஸ் பெய்ண்ட்ஸ் லங்கா (மல்ட்டிலக்) நிருவனத்தின் நிறைவேற்ற அதிகாரி சஜாட் சாலிஹீன் அவர்களை உதவியை கொண்டு உதவி செய்துள்ளோம். இது போன்று ஏனைய தேவையுடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க பிரதேச வர்த்தகர்களும், வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும் என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *