
கொரோனாத் தொற்று முடிவுக்கு வருவது தொடர்பில் தற்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், ஒமிக்ரான் திரிபுடன் உலகளாவிய ரீதியில் கொரோனாப் பரவல் முடிவுக்கு வரலாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எப்பாவல அரச வைத்தியசாலையில் 55 மில்லியன் செலவில் உருவாகும் ஆரம்ப மருத்துவப் பிரிவுக்கு இன்று இராஜாங்க அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, கொரோனா நான்காவது தடுப்பூசி தொடர்பில் ஊடகவயிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றது! – வடிவேல் சுரேஸ் எம்.பி




