அம்பாறை கோர விபத்து: ஒருமாத குழந்தை உட்பட மூவர் பலி!

அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருமாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *