
16 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாடு வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களில் மூன்று மாதங்கள் முடிந்த பிறகு 16 முதல் 19 வயது வரையிலான மாணவர்கள் இரண்டாவது டோஸைப் பெற தகுதியுடையவர்கள்.
இரண்டாவது டோஸ் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களுக்கு பைசர் தடுப்பூசி போதுமான அளவில் உள்ளது.
அம்பாந்தோட்டைக்கு மாத்திரம் பைசரை அரசாங்கம் வழங்கியதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
பைசர் தடுப்பூசி குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் போட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் மக்களின் கோரிக்கையான பைசர் தடுப்பூசியை தட்டுப்பாடு இன்றி அனைவருக்கும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். என அவர் தெரிவித்தார்.




