
நாட்டில் இன்று மக்கள் ஒருவேளை சாப்பிடுவதே கேள்விக்குறியாக உள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்; தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது ஆட்சியில் 2015 – 2019 காலப்பகுதியில் 80வீதம் பூர்த்தி செய்யப்பட்ட மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நேற்று ஜனாதிபதி திறந்து வைத்தார்.
ஜனாதிபதி ஆவேசமாக பேசினார். அந்த பேச்சில் ஒரு கடும் தொனி இருந்தது. போபமாக பேசினார். அவர் ஆட்சியில் இருக்கும் போது ஏன் இப்படி ஆவேசமாகப் பேசினார் என்பது எமக்குப் புரியவில்லை.
ஆனால், இப்போது அவரை விட இந்நாட்டு மக்களே அதிக கோபத்தில் உள்ளனர். ஜனாதிபதிக்கு நான் சொல்ல விரும்புவது, அவர் ஆவேசமாக பேச வேண்டிய அவசியமில்லை.
இன்று எரிவாயு, பால் மாவுக்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர். அத்துடன் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
ஒருவேளை ஒரு வேளை உண்ண முடியாத நிலையிலும், வருமான மூலங்களை இழந்து தங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் துண்டித்துள்ளமை தொடர்பில் மக்கள் ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
எனவே, ஜனாதிபதி ஆவேசமாக பேசுவதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.




