இந்திய அமைச்சர் எல்.முருகன் யாழ். விஜயம்

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்

எல். முருகன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(09) வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைப்பதற்காகவே வருகை தரவுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக இன்று(9) இலங்கை வரும்  இணையமைச்சர், முருகன் பெப்ரவரி 12-ம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்திய அரசின் நிதி உதவி மூலம் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்திற்கு இநதியப் பிரதமர் நரேந்திர மோடி 2015 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார். இந்த மையம் இந்தியா இலங்கை இடையேயான மேம்பட்ட நல்லுறவிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்.

மேலும் வடக்கு மாகாண மக்களின் கலாச்சார உட்கட்டமைப்பிற்கான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைய உள்ளது. 

இந்த மையம் அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு வசதியுடன் கூடிய அரங்கம் 11 தளங்களுடன் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *