இன்றைய ராசிபலன் – 16 ஜனவரி 2022

இன்றைய ராசிபலன் 16 ஜனவரி 2022: Daily Horoscope, January 17 – தை பெளர்ணமி

ரிஷப ராசியில் ராகு, மிதுனத்தில் சந்திரன்விருச்சிக ராசியில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சூரியன்மகர ராசியில் சனி, புதன், சுக்கிரன், கும்ப ராசியில் குருவிருச்சிகம் ராசியில் இருக்கும் அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.

விருச்சிக ராசியில் கேது, செவ்வாய், தனுசு ராசியில் சூரியன்
மகர ராசியில் சனி, புதன், சுக்கிரன், கும்ப ராசியில் குரு
விருச்சிகம் ராசியில் இருக்கும் அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.

மேஷம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயமடைவீர்கள். பெண்களுக்கு உகந்த தினமாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் காலதாமதமாகி வெற்றி கிட்டுவதாக இருக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் சந்தோசமும் உண்டாக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளை திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உங்கள் கடின முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். தம்பி மற்றும் தங்கைகளுடன் சர்ச்சை கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். சிறிய அளவிலான மனக்குழப்பத்தில் இருப்பீர்கள். இருப்பினும் உங்கள் முடிவுகள் மிகச்சரியாக இருக்கும். பெண்களுக்கு திருமணம் தொடர்பான காரியங்கள் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள்.

மிதுனம் இன்றைய ராசிபலன்

நண்பர்களே இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி அடையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாளாகும் திருமண வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். பூர்வீகத்தில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீர்வு உண்டாகும். ஒரு சிலருக்கு பிரயாணம் செய்ய நேரிடும்.

கடகம் இன்றைய ராசிபலன்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். இருப்பினும் இன்று மாலை குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதமாகி வெற்றிகரமாக முடியும்.

பொருளாதாரத்தில் ஓரளவு பற்றாக்குறை இருந்தாலும் அவர்களை திறம்படச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

Leo சிம்மம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதைக் கவ்வும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். சிறிய அளவில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவர்களை திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால், உணவு பொருட்களில் கவனமாக இருக்கவும். உடற் பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபடுவது உடலையும் மனதையும் நன்றாக இருக்க வைக்கும். மாணவர்களின் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை.

கன்னி இன்றைய ராசிபலன்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல நாள் ஆகும். வெங்கடாஜலபதி வழிபாடு உங்கள் முயற்சிகளை மேலும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் மற்றும் தொழிலில் internal சேஞ்ச் எனப்படும் கம்பெனிக்கு உள்ளேயே மாறுதல்கள் வர உள்ளது என்றாலும் நல்ல மாறுதல்கள் ஆகவே இருக்கும். முருகப் பெருமான் வழிபாடு முற்றிலும் உங்கள் மனக் கவலையை தீர்க்கும்.

துலாம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதலுடன் ஒற்றுமை ஏற்படுவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவும்.

வேலைக்காகவும் கல்விக்காகவும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். சொத்துக்கள் தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். இவர்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் அசதி ஏற்படும் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். சற்றே மனதைரியத்தை இழக்க நேரிடலாம் என்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிரச்சனைகளுக்கு பின் அன்யோன்யம் உண்டாகும்.

எதிர்பாராத தனவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திற்காக அல்லது தொழில் நிலைக்காக அதிகபட்ச அலைச்சல்களை சந்திக்க நேரிடலாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.

தனுசு இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் துவக்குவது அல்லது மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும்.

உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு புதிய பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். சற்று கடின முயற்சிக்குப் பின் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சிறு சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள்.

மகரம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் வெற்றிகரமாக முடிக்கும்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வார்கள். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டு விலகும். காதல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சற்று மன அழுத்தம் மிகுந்த நாளாக இருக்க வாய்ப்பு உள்ளது. என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

கும்பம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பாராத தனவரவு உண்டாகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். சொந்த தொழில் முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம் கூட்டுத் தொழிலில் ஆதாயம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும்.

பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். உத்தியோக உயர்வு கிடைக்க புதிய வாய்ப்புகள் தென்படும். ஒருசிலர் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மீனம் இன்றைய ராசிபலன்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும்.

சுபகாரிய நிகழ்வுகளை சற்று தள்ளிவைப்பது நல்லது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு மொபைல்போனை மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடித்தளங்களை அமைத்து விடலாம்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *