
16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் 2ஆம் டோஸை செலுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் உடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் நாட்களில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டு 3 மாதங்களை கடந்தவர்களுக்கு, இரண்டாம் டேஸை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.




