டென்மார்க்கில் ஒமிக்ரோன் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்!

நாட்டின் சுகாதார நிபுணர்கள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் அறிவித்துள்ளார்.

இதன்படி, திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் பார்வையாளர்களை மீண்டும் வரவேற்கக்கூடிய இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களும் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

5.8 மில்லியன் மக்கள் வசிக்கும் டென்மார்க்கில் ஜனவரி 31ஆம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதில் பங்கேற்போர் முகக் கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்றிலிருந்து சமீபத்தில் குணமடைந்ததற்கான அல்லது கொரோனா எதிர்மறை சான்றிதழை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் டென்மார்க் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக், தொற்றுநோய் நிலைமையை அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருவதாகவும், எங்கள் சொந்த மற்றும் வெளி நிபுணர்களிடமிருந்து தெளிவான அணுகுமுறை இல்லாதிருந்தால், மீண்டும் திறப்பதை ஆதரித்திருக்க முடியாது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *