13வது திருத்ததிற்கு பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் கண்டிப்பாக சமஸ்டி முறையை ஆட்சியை கொண்டுவருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகங்கள் பல கேள்விகளை முன்வைத்திருந்தனர்.
இதில் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பிக்குகள் முன்னெடுத்த போராட்டம் தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன் இன்று வீதிக்கு இறங்கிய தேரர்கள் இந்த நாட்டை ஆள்பவர்களா என கேள்வி எழுப்பிய சி.வி.விக்கினேஸ்வரன் ஒவ்வொருவரும் அவர்களின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதென தெரிவித்த சி.வி.விக்கினேஸ்வரன்,
ஆனால் அது தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் எப்போதும் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.