நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்த மீண்டும் சிக்கல்!

நொரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்துவது கடினம் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள கப்பலுக்கு பணம் செலுத்துவதற்கு தற்போது பணம் இல்லை என அந்த நிறுவனத்தின் தலைவர் திரு.ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களுக்கும் 30% பணம் செலுத்தப்பட்டாலும் மீதமுள்ள தொகையை கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கும் முன் செலுத்த வேண்டும் என நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பணத்தை செலுத்துவதற்கான நிதி தற்போது போதுமானதாக இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply