எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்ததில் இடம்பெறுகின்றது.
குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி யாழ்ப்பாணமாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் முப்படைகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன், சின்னத்தம்பி தங்கவேலு சுமன், ராமச்சந்திரன் கலையமுதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.




