துருக்கிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி நாடுககளில் ஒன்றான துருக்கியில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.

துருக்கியில் தேயிலை ஏற்றுமதிக்கான ஓர்டர்களைப் பெற்ற இலங்கை வர்த்தகர்கள் இதனால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துர்க்கியேவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 1,000-10,000 கிலோகிராம் வரையிலான தேயிலையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேயிலை சபை அனுப்பி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply