மூதூரில் தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு மானியக் கொடுப்பனவு வழங்கிவைப்பு!

தென்னைப் பயிர்ச்செய்கை  சபையினால் தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான பசளை மானியக் கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை மூதூர் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.சிபான் தலைமையில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர், சம்பூர், கட்டைபறிச்சான் ,தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 65 தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு இதன்போது பசளை மானியக் கொடுப்பணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்நிகழ்வில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி, தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply