யானையின் பிடியிலிருந்து நொடிப்பொழுதில் தப்பிய பயணிகள்!

கதிர்காமம் – புத்தள வீதியில் காட்டு யானை ஒன்றின் நடவடிக்கை தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த சொகுசு வான் ஒன்றை இடைமறித்த யானை, வானில் இருந்து உணவை பெற்றுப்கொள்ளவும் முயற்சித்துள்ளது.

இதன் போது அந்த யானை வானினுள் தும்பிக்கையையிட்டு ஆக்ரோசமாக நடந்துகொண்டது.

எனினும், குறித்த வீதியில் எதிர் திசையில் வந்த மற்ற வாகனங்களில் வந்தவர்கள் ஒலியெழுப்பி, காட்டு யானையிடம் இருந்து வானையும் வானில் இருந்தவர்களையும் காப்பாறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *