
அரசாங்கம் தொடர்ந்தும் அமைதியாக இருந்தால் நாடு முழுமையாக செயல் இழக்கும் என ஜே.வி.பியின் கனிய எண்ணெய் சார் தொழில் சங்க தலைவர் அசோக ரன்வெல தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எரிசக்தி, மின்சார சபை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதால், சபுகஸ்கந்த மின்சாரம் உற்பத்தி நிலையத்திற்கு எண்ணெய் அவசியமாகும்.
எண்ணெய் குறைபாடு ஏற்படுமாயின் அவற்றை பெற்றுக்கொள்ள, மின்சார சபை வெளி நாடுகளில் டொலரை வழங்கி எண்ணெயைப் பெற வேண்டும்.
ஆனால்ஆ மின்சார சபை கூறுவது, எண்ணெய் பெற்றுகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது, வரும் காலங்களில் இவ் மின் நிலையம் செயற்படாது என்று.
சபுகஸ்கந்த மின் நிலையம் செயற்படாமல் செல்லுமாயின் நாட்டில் மின்சார சமநிலை குறையும்.
அதேபோல தண்ணீரின் மட்டம் குறைவதால் நீரினால் உற்பத்தி ஆகும் மின்சாரம் குறைவடையும்.
மின்சார உற்பத்தி நிலையம் பாதிக்கப்படுமாயின் மக்கள் இன்னலுக்கு உட்படுவார்கள்.
இந்த நிலையில், அரசாங்கம் எந்த நடவடிக்கையும், எடுக்கவில்லை. 25ஆம் திகதி புதிய எண்ணெய்க் கப்பல் ஒன்று வருவதாக கூறப்பட்டது. ஆயினும் எந்த ஒரு தகவலும் இல்லை. – என்றார்.
யாழில் அத்தியாவசிய பொருள்களைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை! வடக்கு ஆளுநர் அதிரடி

