
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ இன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார்.
இலங்கை ஜனாதிபதி ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, திணைக்களத்தில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்து அனைத்துப் பிரிவுகளையும் மேற்பார்வையிட்டதுடன், அதன் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.