மூதூரில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி – புலியடிச்சோலை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் தடியொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கங்குவேலி- புலியடிச்சோலை பகுதியைச் சேர்ந்த கோகுலராசா வயது (55) என்பவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு குறித்த நபரை தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 26 வயதுடைய சந்தேக நபரொருவரையும் மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட வாய்தர்க்கம் பின்பு கைகளப்பாக மாறியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *