
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான சாரதீ துஷ்மந்தக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டிருந்தார்.
அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, கடந்த நான்கு நாட்களில் மட்டும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.