தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு புதிய அலுவலகம்!

முற்போக்கு கலை இலக்கியச் செயற்பாடுகளின் முன்னோடியாக செயற்பட்டுவரும் தேசியகலை இலக்கிய பேரவையின் அலுவலகம் வவுனியாவில் இன்றையதினம்(சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

பேரவையின் தலைவர் க.தணிகாசலம் தலைமையில் குடியிருப்பு வீதி பூந்தோட்டம் வவுனியா எனும் முகவரியில் குறித்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வரவேற்புரையை சு.டொன்பொஸ்கோ நிகழ்த்தியிருந்தார். அதனை தொடர்ந்து பேரவையின் தலைவரால் அலுவலகம் உத்தியோகபூர்வமாக நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து வாழ்த்துரைகளும், கவிதை அரங்கும் இடம்பெற்றிருந்தது.

அலுவலகத்தில் இ.கா.சூடாமணி அரங்கு மற்றும் மாவை வரோதயன் நூலகம் என்பன அமையபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வில் சிரேஸ்ட பொதுவுடமைவாதி சி.கா.செந்தில்வேல், ஓய்வுநிலை விரிவுரையாளர் நா.பார்த்தீபன், தமிழ்மணி மேழிக்குமரன், நி.பிரதீபன், கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *