
வடமாகாணசபை முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரனின் புதல்வியின் திருமணம் நாளை (23) இடம்பெறவுள்ளது.
வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட அனந்தி சசிதரன், அமோக வெற்றியடைந்து, பின்னர் அமைச்சு பதவியும் வகித்தார்.
வடமாகாணசபை உறுப்பினராக பதவிவகித்த போது, அனந்தி சசிதரனின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கும், அனந்தி சசிதரனின் மகளுக்குமிடையில் காதல் மலர்ந்துள்ளது.
தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.
நாளை இணுவில் பகுதியிலுள்ள திருமண மண்டபமொன்றில் திருமணம் இடம்பெறவுள்ளது.