
அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக தாங்கள் அளவிட முடியாத நிதி இழப்பை சந்தித்து வருவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், பெருமளவிலான உணவுப் பொருட்களும் வீணடிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் போது, அதன் பின்னர் யாரும் கடைகளுக்கு வருவதில்லை.
சிறிய அளவிலான சிற்றுண்டிச்சாலை மற்றும் கடை உரிமையாளர்களின் தினசரி வருமானம் குறைந்துவிட்டது.
தற்போதைய போக்கு தொடர்ந்தால் அவர்கள் வணிகம் இல்லாமல் போவதாகவும் அவர் கூறினார்.
மின்வெட்டு காரணமாக பால் பொருட்கள் மற்றும் இறைச்சிப் பொருட்களை நிலையான வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்க முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும்! மைத்திரி