கணவர் இழப்பை தாங்காது தீ மூட்டி உயிரை மாய்த்த மனைவி! – யாழில் துயரச் சம்பவம் SamugamMedia

கணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்., 3ஆம் குறுக்குத் தெருவில் நடந்துள்ளது. 

செல்வதயாளரூபன் நாகராணி (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவரது கணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியைத் தொலைபேசி ஊடாக அறிந்த மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Leave a Reply