கொழும்பின் பிரபல வைத்தியசாலை ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா!

கொழும்பின் ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜனித் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி, 3 மருத்துவர்கள், பதினொரு தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணிக்குழாமைச் சேர்ந்த ஒன்பது பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெறும் இரண்டு சிகிச்சை அறைகளில் 75 படுக்கைகளே உள்ளன, எனினும், தற்போது 81 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *