சில அமைச்சர்களின் சூழ்ச்சியால் அல்லல் படுகின்றேன்! துஷான் குணவர்தன பகீர்

நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவை கைது செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

என்னை கைது செய்ய உள்ளனர். விமான நிலையத்தில் வைத்து என்னை வழி மறித்தனர்.

வெளிநாடு செல்லும் போது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேன்.

சதொச வெள்ள பூண்டு வழக்கில் முறைப்பாடு செய்த நான் இன்று சந்தேக நபராக மாறியுள்ளேன்.

பந்துல குணவர்தன, லசந்த அழகியவன்ன மற்றும் ஏனைய அமைச்சர்கள் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருக்கின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *